Can't view the contents correctly? Click Here >>

தமிழ்நாட்டை சஹாராக்குவேன் – பிறந்த நாளில் கருணாநிதி சபதம்

ஊர்மக்கள் யாவரும் பட்டினி கிடந்தால் தான் பண்ணையாரின் செல்வாக்கும், அதிகாரமும் அப்படியே இருக்கும். இது ஒரு சாதாரண விதி. இதை அசாதாரணமாக பயன்படுத்தி வருவது தமிழகத்தின் முதல்வராக இருக்கும் கருணாநிதி தான். 100 – தலைமுறைக்கும் மேல் சொத்து சேர்த்துவிட்ட கருணாநிதி தன் பரம்பரை மட்டுமே தொடர்ந்து தமிழகத்தை ஆட்சி செய்வது (அதாவது சுரண்டுவது) எப்படி என்பதற்கான காய் நகர்த்தல்கள் தான் எத்துணை எத்துணை.

தமிழகத்தின் நீர் ஆதாரங்களை முடுக்குவதற்கு துணைபோவது மட்டுமே இவரது வாழ்வின் குறிக்கோளும், இலட்சியமாகும். தொடர்ந்து அதற்காகவே இவரும் பாடுபட்டு வருகிறார். தமிழகத்தில் பெரும்பான்மை மக்களாக இருக்கும் ஏழை விவசாயிகளை ஏழையாகவே வைத்திருப்பதுதான் இப்பெரியவரின் திட்டம். ”நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவரின் வார்த்தையை கருணாநிதியின் பார்வையில் சற்றே விவரிக்க விரும்புகிறேன்.

தமிழகத்தின் நீர் ஆதாரங்களாக இருக்கும் முக்கிய நதிகளை முடக்கிவிடுவதன் மூலம், தமிழக விவசாயிகள் வறுமையின் கோரப்பிடியில் எளிமையாக சிக்கிக் கொள்வர். பின் அதிலிருந்து மீள்வதற்கு எவ்வித வழியும் இல்லாதபொழுது தற்கொலை செய்துகொள்வது அல்லது எலிக்கறியை உண்டு உயிர்வாழ்வது என்கின்ற முடிவை நோக்கித்தான் செல்வர். அப்பொழுது அவர்கள் மீது அதிக கரிசனத்தை காட்டுவதைப்போல கஞ்சித்தொட்டி திறந்து தன் பரம்பரையால் மட்டுமே அவர்களை வறுமையிலிருந்து மீட்க முடியும் என்கின்ற மாயதோற்றத்தை உருவாக்கி தொடர்ந்து அவர்களை பட்டினியால் சாகச் செய்வது தான் இவருடைய திட்டம். தன்னிடம் பணம், அவரிகளிடம் பட்டினி. இரண்டையும் வளர்ப்பதற்கு இவர் எடுத்துக்கொண்டுள்ள ஆயுதம் தான் நீர்.

நதிநீர்ப் பிரச்சனையில் தமிழகத்திற்கு மு.க ஆற்றிவரும் துரோகச் செயல்களின் பட்டியல் வருமாறு ;

• காவிரி நீர் உடன்படிக்கையை புதுப்பிக்கத் தவறியது
• நடுவர்மன்ற தீர்ப்பை செயல்படுத்த கோராதது
• தெலுங்கு-கங்கை திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாதது
• முல்லைப் பெரியாறு பிரச்சனையில் உறுதியான நடவடிக்கைகளை இதுவரையிலும் எடுக்காதது
• ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை வேண்டுமென்றே கிடப்பில் போடச்செய்தது
• பாலாற்றுப்பிரச்சனையில் அமைதி காத்து வருவது

……… இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

வெண்ணை திரண்டு வரும்போதெல்லாம் தாழியை உடைப்பதில் பலே கில்லாடியான இவர், தொடர்ந்து தமிழகத்திற்கு அனைத்து வழிகளிலும் தீங்கு செய்வதையே உயிர்மூச்சாக எண்ணி செயல்பட்டு வருகிறார்.

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மு.க-வின் செயல்பாடு :

முல்லைப் பெரியார் அணை விவகாரத்தை பொறுத்தவரை, ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால் எல்லாமே சால்ஜாப்பு தான்.
காலம் தாழ்த்துவது, பிரச்சனை என்றால் உச்ச நீதிமன்றம் செல்வது பிறகு விசாரணை, ஒத்தி வைப்பு, மறு முறையீடு மிண்டும் தள்ளிவைப்பு இறுதி.........யில் தீர்ப்பு. அப்படியே தீர்ப்பு வந்தாலும் அதனை செயல்படுத்த தயங்குவது. பிறகு மீண்டும் ஏதாவது கூறி காலம் தாழ்த்துவது. இப்படியே உருப்படியான மற்றும் உறுதியான முடிவு எதுவும் எடுக்காமல் காலத்தை தாழ்த்துவது மக்களை ஏமாற்றுவதற்கு சரியான வழி என்பதை எல்லா அரசியல்வாதிகளும் தெளிவாக தெரிந்து வைத்துள்ளனர்.

கடந்த அதிமுக அரசு ஓரளவிற்கு துணிந்து செயல்பட்டதென்றாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பான 136-அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துவதினை செயல்படுத்தாமல் விட்டுச் சென்றது மக்களுக்கு இழைத்த பச்சைத் துரோகம்.

ஆட்சியை கைப்பற்றிய திமுகவோ பிரதமருக்கு ஓலை அனுப்புவது, புறா விடுவது என அந்தக்கால தகவல் தொடர்பு முறையினையே பயன்படுத்துவது திட்டமிட்ட காலம் தாழ்த்தும் வேலையே என்பதற்கு வேறென்ன சான்று தேவை?தான் கேட்ட அமைச்சர் பதவிகள் கிடைக்கவிடில், "ஆட்சிக்கு வழங்கிடும் ஆதரவை திரும்பப் பெற சிறிதும் தயங்க மாட்டேன்" எனக் கூறியதையும் அதற்காக டில்லியில் முகாமிட்டு பெற்றதையும் தமிழக மக்களும், தமிழக விவசாயிகளும் இந்நேரத்தில் மறந்துவிடக் கூடாது.

தனக்கு ஆதாயமெனில், எதையும் செய்யத் துணிந்த திமுக முல்லைப் பெரியார் அணை விவகாரத்தில் மக்களுக்கு சாதகமாக, ஒரு படி கூட எடுத்து வைக்காது.

பிரதமர் முன்னிலையில் பேச்சு வார்த்தை என்பதெல்லாம் முழுக்க முழுக்க கண்துடைப்பு தான். பேச்சுவார்த்தையின் இறுதி வடிவம் என்ன, என்பது இப்போதே தெளிவாக தெரிந்து விட்ட பிறகு அப்பேச்சு வார்த்தையில் பங்கேற்பது மக்களை மதி மயக்கும் செய்யும் வேலையைத் தவிர வேறொன்றுமில்லை.

தான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கும் கேரள அரசு, பேச்சு வார்த்தைகு முன்பே தன் நிலையினை தெளிவுபடுத்திவிட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை, தன் கால் தூசுகு சம்மாகக் கூட கருதாத கேரள அரசினை கண்டித்தவர் யார்? ஒருவருமிலர். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, இடது சாரிக் கட்சிகள் என அத்துனை பேரும் ஊமைகளாகி விட்டது, மக்களை தொடர் ஊமைகளாக்கும் செயல்.

வீணாக அரபிக்கடலில் கலக்கும் தண்ணீரை, உருப்படியாக விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத அவல நிலைமைக்கு, மக்கள் விழிப்பிணர்வின்மையும், ஒற்றுமையின்மையுமே காரணங்கள்.

பாலாற்றுப்பிரச்சனை :

வடமாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமான பாலாற்றின் குறுக்கே அணை கட்டவேண்டுமென்பதில் காங்கிரஸ் ஆளும் ஆந்திர அரசு மிகத் தீவரமாக உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் குப்பம் அருகே தொடங்கப்பட்ட போது, தமிழக எதிர்க்கட்சிகளின் வன்மையான கண்டிப்பால, ராஜசேகர ரெட்டி அணை கட்டும் பணியை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவத்தார். இதனால் பிரச்சனை மெல்ல மக்களின் மனதைவிட்டு மறைய ஆரம்பித்தது. இதைத்தான் எதிர்பார்த்து காத்திருந்த காங்கிரஸ் அரசு அணையை வேறுமாதிரியாக அதாவது சிறுசிறு தடுப்பணைகளாக கட்டிக்கொள்வது என்று முடிவெடுத்து அதற்கான பூஜையும் முடிந்துவிட்டது. 100- மீ தூரத்திற்கு ஒரு தடுப்பணை வீதம் 100 தடுப்பணைகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எவ்வித எதிர்ப்பும், கண்டிப்பும் தெரிவிக்காமல் இந்த மஞ்சம் முனி தன் பிறந்த நாளை கொண்டாடுவதில் மிகத்தீவரமாக இருந்து வருகிறார். விவசாயிகளின் மீது இவர் வைத்திருக்கும் பற்றை பார்க்கும்போது மயிர்க்கூச்செறிகிறதா?

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துவரும் மு.க ஆந்திர காங்கிரஸ் அரசிற்கும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டுவதில் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறார். “ரோம் நகரம் பற்றியெரியும் போது அதன் மன்னன் நீரோ பிடில் வாசித்துக்கொண்டிருந்தானாம்”. இது வெறும் வரலாற்றுச் சம்பவமன்று. தமிழக முதல்வர் மு.க-வின் அன்றாடப் பணி. எதிரிகளுக்கு துணைபோவதின் மூலம் இரண்டு பக்கத்திலிருந்தும் சலுகையை ஏகபோகமாக அனுபவிக்க வேண்டுமென்பதே மு.க-வின் நயவஞ்சக திட்டம். “ஊரைக்கெடுத்து உலையில் போட்டுக்கொள்வது எப்படி” என்பதற்கு நடமாடும் (?) பல்கலைக்கழகமாக இருக்கும் இந்த மு.க தமிழக விவசாயிகளின் அடிவயிற்றில் சம்மட்டியாக அடித்துக்கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் மழைக்காலங்களில் பெய்யும் நீரை சேமித்து வைக்க இதுவரையிலும் எந்தத் திட்டமும் இல்லை. ஏராளமான தண்ணீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க எந்த முயற்சியும், நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இதன் பிண்ணனியில் இருக்கும் ரகசியம் இதுதான். அனைத்து துறைகளிலும் தன் குடும்பத்தை ஈடுபடுத்திவிட்ட நிலையில் புதிதாக ஈடுபடுவதற்கு எதுவும் இல்லை. இந்நிலையில் மக்களின் முக்கிய வாழ்வாதாரமான தண்ணீரை விற்பதன் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை அள்ளலாம். இதற்கு முதலில் தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கையில் தான் மு.க தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். விரைவில் மு.க குடும்பம் தண்ணீர் விற்பனையை தொடங்க உள்ளது.

சிதறுண்டு கிடக்கும் விவசாயி பெருமக்களே, மு,க-வின் முகத்திரை நாங்கள் கிழித்துவிட்டோம். விழித்துக்கொள்ள வேண்டியது உங்களது பொறுப்பு. மு.க-வை ஆதரிப்பதும் இறப்பை நோக்கிச் செல்வதும் ஒன்றுதான்.

free hit counters
பதிப்புரிமை © TAMILCAFE. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை / IP கொள்கை 
Disclaimer: This site does not store any files on its server. We only index and link to content provided by other sites.