|
|
இந்திய ஆட்சிப்பணி - ஒரு பார்வை
இந்திய திருநாட்டை வழிநடத்தி செல்வதும், இந்தியாவின் முதுகெலும்பாக
இருந்து செயல்படுவதுமான இந்திய ஆட்சிப் பணி. நாட்டின் மிக உயந்த கவுரவமிக்க
பணியாக கருதப்படுகிறது. அரசு இயந்திரத்தை முழுவதுமாக செயல்பட வைக்கும்,
இத்தகைய பணிகள் எப்பொழுதும் சவால் நிறைந்ததாகவே இருக்கின்றன. அதிகாரம்,
கவுரவம், சமுதாயத்தில் உயர்மதிப்பு, மரியாதை அரசுப்பதவி போன்ற காரணங்களால்,
இன்றையக்கும் பல இளைய தலைமுறையினர் இந்திய ஆட்சிப் பணியை தம் இலட்சியமாகக்
கொண்டுள்ளனர்.
இலட்சங்களில் சம்பளம் வாங்கும் கணிப்பொறி, மேலாண்மை வல்லுனர்கள் கூட
இப்பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர். காரணம், இது அளிக்கும் சமுதாய அந்தஸ்து,
இது அளிக்கும் திருப்தி- மன நிறைவு, பணி பாதுகாப்பு, சவால்கள் நிறைந்த பல
பதவிகளை வகிக்கும் வாய்ப்பு, நாட்டின் வளர்ச்சியில் நேரடியாக பங்கு
கொள்ளும் வாய்ப்பு, மக்களுக்காக பணியாற்றுவதற்கானதொரு வாய்ப்பு இப்படி
ஏராளம், ஏராளம். உண்மையில், நாட்டின் சட்ட திட்டங்களை உருவாக்குவதும், அதனை
செயல்பட வைப்பதும் இத்தகைய இந்திய ஆட்சிப் பணி - அதிகாரிகளே. சவால்கள்
நிறைந்த உலகிற்கு உங்களை அழைத்துச் செல்வதற்கான வழிதான் இந்த இந்திய ஆட்சிப்
பணி . முதன்மைச் செயலாளர், மாவட்ட ஆட்சித் தலைவர், ஆணையாளர், போன்ற பல
உயர்பதவிகளை வகிக்க, நாட்டை வழிநடத்திச் செல்ல துணைபுரியும் வழிதான் இந்த
இந்திய ஆட்சிப் பணி .
தகுதி :-
தேசியம் (Nationality) :
-
இந்திய
ஆட்சிப்
பணி(IAS),
இந்திய
காவல்
பணி (IPS)
பணிகளுக்கு தேர்வு எழுதுபவர் இந்திய குடிமகனாக
கட்டாயம் இருத்தல் வேண்டும்.
-
மற்ற
பணிகளுக்கு, தேர்வு எழுதுபவர் கீழ்க்கண்ட ஒருவராக இருத்தல் அவசியம்.
-
இந்திய குடிமகன் (அல்லது)
-
நேபாளில் பிறந்தவர்; (அல்லது)
-
பூடான் குடிமகன்
வயது வரம்பு (Age Limit)
21-வயதிலிருந்து 30-வயதிற்குட்பட்டவறாக இருத்தல் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட உச்ச வயது வரம்பு சில பல தளர்வுகளை கொண்டது. அவையாவன :
SC, ST - அதிகபட்சமாக - 5 ஆண்டுகள்
OBC - அதிகபட்சமாக - 3 ஆண்டுகள்.
போரில் காயம்பட்ட இராணுவ வீரர்கள் -5 ஆண்டுகள்.
குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள்
இராணுவ வீரர்கள்- 5 ஆண்டுகள்.
பார்வையற்றோர், காது கேளாதவர், உடல் ஊனமுற்றவர்- 10 ஆண்டுகள்.
குறைந்தப்பட்ச கல்வித் தகுதி :
பல்கலைகழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டம்
பெற்றிருப்பது அவசியம், இறுதியாண்டு மாணவர்கள், முதனிலைத்தேர்வு எழுத
அனுமதிக்கப்படுவர். ஆனால், முக்கியத்தேர்வு எழுதும் போது, இளங்கலை தேர்வில்
வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு எண்ணிக்கை :
(பொதுப்பிரிவினர்) General - 4
SC, ST - No limit
OBC - 7
குறிப்பு :
-
முதனிலைத்
தேர்வு
எழுதினால்
அதுவும்
ஒரு
தேர்வு
எண்ணிக்கையாக
எடுத்துக்
கொள்ளப்படும்.
-
முதனிலைத்தேர்வில்
ஏதேனும்
ஒரு
பாடத்தை
எழுதினாலும்,
அதுவும்
ஒரு
தேர்வு
எண்ணிக்கையாக
கணக்கில்
கொள்ளப்படும்.
-
தேர்வு
எழுத
அனுமதி
மறுக்கப்பட்டாலோ,
நிராகரிக்கப்பட்டாலோ
அதுவும்
ஒரு
தேர்வு
எண்ணிக்கையாகவே
கணக்கில்
கொள்ளப்படும்.
தேர்வு விவரம்:-
இது இரண்டு படி நிலைகளை கொண்டது.
• முதனிலைத்தேர்வு (கொள்குறி வகை, முக்கியத் தேர்வுக்கான மாணவர்களை
தேர்ந்தெடுப்பதற்காக) • முக்கியத்தேர்வு (ம) நேர் காணல்
முதனிலைத்தேர்வு :
இத்தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. (கொள்குறி வகை) மொத்தம் 450
மதிப்பெண்களுக்கான இத்தேர்வில், பொது அறிவு (150 மதிப்பெண்) மற்றும்
விருப்பப்பாடம் 300 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வில்
எடுக்கப்படும் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்பட்டா. இத்தேர்வு, முக்கியத்
தேர்வுக்கான மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு மட்டுமே.
முதனிலைத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களே, முக்கியத்தேர்வுக்கு
அழைக்கப்படுவர். மொத்த காலியிடங்களைப் பொறுத்து, 12 முதல் 13 மடங்கு
மாணவர்கள், முக்கியத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
• அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் இருக்கும். • வினாக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும். • தேர்வுக்கான பாடத்திட்டம், இளநிலை பாடத்திட்டத்தை ஒத்ததாக இருக்கும்
முதனிலைத்தேர்வு- முதல் தாள்
1. பொது அறிவியல் 2. உள்நாட்டு (ம) பன்னாட்டு நடப்புச் செய்திகள், முக்கிய நிகழ்வுகள் 3. இந்திய வரலாறு மற்றும் ஐனெயைn யேவழையெட ஆழஎநஅநவெ (சுதந்திர போராட்டம்)
4. இந்திய மற்றும் உலக புவியியலமைப்பு 5. இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரம் 6. பகுத்தறியும் திறன்.
போன்றவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். இவையனைத்தும், இளநிலை
தரத்திலான, கொள்குறி கேள்விகளாக இருக்கும்.
அனுமதிக்கப்பட்ட விருப்பப் பாடங்களாவன :-
Agriculture Animal Husbandry & Veterinary Science Botany Chemistry Civil Engineering Commerce Economics Electrical Engineering Geography Geology Indian History Law Mathematics Mechanical Engineering Medical Science Philosophy Physics Political Science Psychology Public Administration Sociology Statistics Zoology
முக்கியத் தேர்வு :-
இத்தேர்வு இரண்டு நிலைகளைக் கொண்டது.
• எழுத்துத் தேர்வு • நேர்காணல்
எழுத்துத் தேர்வு
மொத்தம் 9 தாள்களைக் கொண்ட இத்தேர்வில் விரிவான விடைளித்தல் வகையில்
இருக்கும் (கட்டுரை வடிவில்)
தாள் - I - 18-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு இந்திய
மொழி 300 Marks. தாள் - II - English (Qualifying தாள்) தாள் - III - Essay (பொது கட்டுரை) தாள் -IV&V - பொது அறிவு - 600 (இரண்டு தாள்கள்)
தாள் -VI&VII VIII, IX - ஏதேனும் இரண்டு விருப்பப்பாடம் (ஒவ்வொரு
பாடத்திலிருந்தும் இரண்டு தாள்கள்) (விருப்பப்பாடம் பட்டியல் கீழே
கொடுக்கப்பட்டுள்ளது) -1200
Agriculture Animal Husbandry and Veterinary Science Anthropology Botany Chemistry Civil Engineering Commerce & Accountancy Economics Electrical Engineering Geography Geology History Law Arabic Assamese Bengali Bodo Chinese Dogri English French German Gujarati Hindi Kannada Kashmiri Konkani Maithili Malayalam Manipuri Marathi Nepali Oriya Pali Persian Punjabi Russian Sanskrit Santali Sindhi Tamil Telugu Urdu Management Mathematics Mechanical Engineering Medical Science Philosophy Physics Political Science and International Relations Psychology Public Administration Sociology Statistics Zoology
எழுத்துத்தேர்வு - 2000 நேர்காணல் - 300
மொத்த மதிப்பெண் - 2300
குறிப்பு :
1) எழுத்துத்தேர்வினை 8-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு
மொழியில் எழுதலாம். (ஆங்கிலத்தில் தான் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
தமிழிலேயே எழுதலாம் நேர்காணலில் கூட தமிழிலேயே பதிலளிக்காலம்).
2) மொழிப்பாட வினாத்தாட்கள் மொழி + ஆங்கிலம் பத்தாம் வகுப்பு தரத்திலாக
இருக்கும். இப்பாடங்களில் பெறும் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படுவதில்லை.
தகுதி பெறுவதற்கான அடிப்படைத் தேர்வு மட்டுமே.
3) மொழிப்பாடங்களில் தேர்வுக் குழுவினரால் நியமிக்கப்படும் குறைந்த பட்ச
மதிப்பெண்களை பெற்றால் மட்டுமே கட்டுரை பொது அறிவு மற்றும் விருப்பப்பாட
விடைத்தாள்கள் திருத்தப்படும்.
4) கீழ்கண்ட குறிப்பிடப்பட்டுள்ள பாடங்களின் சேர்க்கை அனுமதிக்கப்படுவதில்லை.
Political science International X Public Administration. Relations.
Commerce and Accountancy X Management Anthropology X Sociology Mathematics X Statistics Agriculture X Animal Husbandry &Veterinary Science Management X Public Administration.
Civil X Electrical X Mechanical
Veterinary Science X Medical Science.
நேர்காணலுக்கு தயாராவது எப்படி?
இந்திய குடிமைப் பணிக்கான இறுதி தேர்வு நேர்காணல் ஆகும். மிக முக்கியமான
கட்டமும் கூட. UPSC-யினால் நியமிக்கப்படும் நேர்காணல் குழு இத்தேர்வினை
நடத்தும். நேர்காணலுக்கு அழைக்கப்படும் மாணாக்கரின் விவரமனைத்தும் (கல்வி +
பணி அனுபவம் இருப்பின் + ஊர் + மாநிலம் + மொழி + . . . . + . . . . )
ஏற்கனவே இக்குழுவினரிடம் அளிக்கப்பட்டிருக்கும். நேர்காணல் மாணவரிடம்
பொதுவான கேள்விகளே கேட்கப்படுகின்றன. அன்றாடம் தம்மைச் சுற்றி நிகழும்
நிகழ்ச்சிகளிலிருந்து தான் அதிக கேள்விகள் கேட்கப்படும். ஒரு சூழ்நிலையை
அல்லது நேர்காணல் குழு குறிப்பிடும் சூழ்நிலையை தேர்வர் எப்படி
எதிர்கொள்கிறார் என்பதே நேர்காணலின் முக்கிய நோக்கமாகும். இச்சூழலை எப்படி
புத்திசாலித்தமனமாகவும், சுயோகிதமாகவும், எதிர்கொள்கிறார் என்பதே அதிகமாக
பரிசோதிக்கப்படுகிறது. தேர்வருடைய புத்திக்கூர்மையை பரிசோதிக்கும் அதே
நேரத்தில், தேர்வர் எந்த அளவிற்கு நாட்டு நடப்புகளை அறிந்து வைத்துள்ளார்
மற்றும் அதனைப்பற்றியதான் அவருடைய கருத்து மற்றும் மனநிலை என்ன என்பதும்
கணக்கில் கொள்ளப்படுகிறது. ஒரு சார்பாக செயல்படுகிறாரா அல்லது நடுநிலையாக
செயல்படுகிறாரா, கடினமாக சூழ்நிலையை எவ்வாறு அணுகுகிறார். தலைமைப்பண்பு
எப்படி, நேர்மைத்தன்மை, உண்மை, உணர்வு எப்படி, ஒரு துறையைப் பற்றியதான
பார்வை மற்றும் ஆழான அறிவு, சமயோகிதத்தன்மை போன்றவை
பரிசோதிக்கப்படுகின்றன.
இவை வெறும் குறுக்கு விசாரணை போன்று நடைபெறுவதன்று, எதார்த்தமான மற்றும்
ஆரோக்கியமான விவாதமாக தேர்வரின் அறிவுத்திறனை வெளிக்கொணரும் விதத்தில்
இருக்கும்.
எழுத்துத் தேர்வின் முக்கிய நோக்கம்.
தேர்வின் பகுத்தறியும் திறன் மற்றும் ஆழமான நுண்ணறிவினை பாpசோதிப்பதே
எழுத்துத் தேர்வின் முக்கிய நோக்கமாகும் விருப்பப்பாடம் மற்றும் பொது
அறிவு பாடங்களில் அவா; எத்தகைய புலமை பெற்றிருக்கிறார் என்பதை கண்டறிவதை
இதன் முக்கிய நோக்கமாகும். வெறும் மனப்பாடமா அல்லது உண்மையறிவா என்பது
இங்கே எடைப்போடப்படும்.
பாடத்திட்டம் இளநிலை தரத்தைவிட சற்று உயா;ந்ததாகவே இருக்கும். முதுகலை
பாடத்திட்டத்திற்கு சற்று இணையாகவே இருக்கும். பொறியியல் பாடத்தினை
பொறுத்தவரை, இளநிலை தரத்திலேயே இருக்கும். விருப்பப்பாடங்களில் மொத்தம்
எட்டு வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களுக்கும் சமமான மதிப்பெண்கள்
வழங்கப்படும்.
ஒவ்வொரு வினாக்களும் இரண்டு பகுதிகளாக பிhpக்கப்பட்டிருக்கும். பகுதி - அ,
பகுதி - ஆ, ஒவ்வொரு பகுதியிலிருந்தும் (4) வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும்.
எட்டு (8) வினாக்களிலிருந்து, ஐந்து (5) வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டும்.
ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒரு வினா கட்டாயமாக பதிலளிக்கும் வகையில்
அமைக்கப்பட்டிருக்கும்.
|
|