ஜெயலலிதாவின் துணிச்சல்
ஜெயலலிதாவின் அன்றொரு நாள் சட்டப்பேரவை வருகை குறித்து நான் எழுதியது...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் துணிச்சல் அசாத்தியமானது. அவர்களை
துணிச்சலின் மொத்த உருவம் என்றுதான் சொல்ல வேண்டும். தனியொருவராக
சட்டமன்றத்திற்குச் சென்றது மட்டுமில்லாது தன்னுடைய கத்தி போன்ற கூர்மையான
வார்த்தைகளால் ( மற்றும் வாதங்களால் ) ஆளுங்கட்சியை நிலைகுலையச் செய்தது
எல்லோரையும் பிரமிக்க வைத்துள்ளது.
இந்திய வரலாற்றிலேயே இப்படியான துணிச்சல்மிக்க அரசியல்வாதியை இன்றுதான்
கண்டுள்ளோம். பெண் என்றாலே பயமிகுந்தவர்கள், துணிச்சலற்றவர்கள்
என்பதையெல்லாம் இன்று தவிடு பொடியாக்கிவிட்டார். அவருடைய இந்த அதிசயத்தக்க
அசாதாரமான துணிச்சலைக்கண்டு ஆளுங்கட்சியே திணறிப்போயுள்ளது.
"உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமிலை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே !
இச்சகத்தோரெல்லாம் எதிர்த்து நின்ற போதுலும்
அச்சமிலை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே !!"
....என்ற பாரதியின் வார்த்தைகளின் மொத்த உருவம் தான் மாண்புமிகு ஜெயலலிதா
அவர்கள்.
ஒருமுறை மாவீரன் நெப்போலியன் அவர்களிடம் "உங்கள் படையில் மொத்தம்
வீரர்கள் எத்தனை பேர் உள்ளனர்?" என்று கேட்டதற்கு அவர் என்னை தவிர்த்து
50,000. என்னையும் சேர்த்து 1,50,000 என்றாரம். ஆனால் மாண்புமிகு ஜெயலலிதா
அவர்கள் இன்னும் ஒரு படி மேலே. அதாவது 1,00,00,000 பேருக்கு சம்மானவர் என்று
நிருபித்து விட்டார்.
5-ஆண்டுகளாக
சட்டமன்றத்திற்கே வராமல், பஞ்சப்படி பயணப்படி எல்லாவற்றையும் தாராளமாக
பெற்றுக்கொண்ட நடைதளர்ந்த தாத்தா இந்நாள் முதல்வர் கருணாநிதி அவர்கள்
இதனைக்கண்டு கூனி குறுகிப்போக வேண்டாமா? தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களை
முட்டாளாக்கிவிட்டு 5-ஆண்டுகளாக சட்டமன்றத்திற்கு செல்லாதா அவர் எங்கே? தம்
கட்சி உறுப்பினர்களுக்கு ஒரு களங்கம் ஏற்பட்டுவிட்டதென்றவுடனேயே,
தனியொருவராக அசாத்திய துணிச்சலுடன் சென்ற மாண்புமிகு ஜெயலலித எங்கே?
மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம் தான் அது.
|