இடைவெளியா? எல்லைக்கோடா??

கடக்கும் தூரம்
சிறிது தான்
ஆனால்
கடக்கக்கூடிய
தூரமா-இது

நட்பு காதலானால்
இடைவெளி
மறுத்தாலது
எல்லைக்கோடா...

இடைவெளியென்றால்
கடக்கக்கூடியதே
ஆனால்
எல்லைக்கோடென்றால்...

யார் முதலில்
கடப்பது
நானா
அவளா

கடந்தபின்
ஏற்படுவது
உறவா?
பிரிவினையா?

நூலிழை
இடைவெளியில்
இருமுனைகளில்
நாங்களிருவரும்
கடப்பவர்களை
கண்டுகொண்டு... ... ...

 

 

 

 

 

 

free hit counters
பதிப்புரிமை © TAMILCAFE. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை / IP கொள்கை 
Disclaimer: This site does not store any files on its server. We only index and link to content provided by other sites.