Can't view the contents correctly? Click Here >>

தற்கொலை- ஒரு நிமிடம்

"ஒரு தற்காலிகமான பிரச்சனைக்கான நிரந்திரத் தீர்வுதான் தற்கொலை". -யாரோ

தொடர் தற்கொலை நிகழ்வுகள். மிகுந்த அழகான, மெத்தப் படித்த தொலைக்காட்சி நடிகைகளின் தற்கொலைச் செய்திகள்தான் இன்றைய நாளிதழ்களின் சூடானச் செய்தி.

தற்கொலை- இதனை உளவியல்பூர்வமாக ஆராய வேண்டியுள்ளது. "தற்கொலை செய்துகொள்வது கோழைத்தனமானச் செயல் மட்டுமல்ல அறீவீனமும் கூட". இவ்வார்த்தைகளை தற்கொலை செய்துகொண்டவர்களும் ஒருநாள் பயன்படுத்தி இருப்பர். அப்படியிருந்தும் ஏன் தற்கொலை செய்து கொள்கின்றனர்?
 

பாதுகாப்பற்ற தன்மை
தனக்கென்று யாருமில்லாதது போன்றதொரு உணர்வு
தனிமை
பயம்
உணர்ச்சி மிகு நிலை
பலவீனம்
இயலாமை
 



எல்லாவற்றிலும் அடிப்படையானது வாழ்க்கையை எதிர்கொள்ள இயலாமை. நம் விருப்பத்திற்கு மாறாக மற்றும் நம்மையும் மீறி வாழ்க்கையில் சில சம்பவங்கள் நிகழ்வதை ஏற்றுக்கொள்ளாத் தன்மையே பெரும்பாலான தற்கொலைகளுக்கு மூல காரணம்.

நம்மைப் பற்றிய உயர்வான மதிப்பீடு எங்கு இல்லையோ அங்கு தற்கொலையின் தாக்கம் மிக அதிகமாகவே இருக்கும். சுய-மதிப்பீடு குறைவதினாலும் தற்கொலை ஏற்படுகின்றது. சூழ்நிலையின் தாக்கம் கூட ஒருவரை தற்கொலை செய்துகொள்ள தூண்டுகின்றன. இறுக்கமான சூழ்நிலைகள் அதிகபட்ச தற்கொலைக்கு காரணமாகின்றன. அந்தச் சூழ்நிலையில் தற்கொலையைத் தவிர வேறு வழியில்லை என்பதை ஏற்றுக்கொள்ள இயலாவிட்டலும் மறுப்பதற்கில்லை.

இருப்பினும் இறைவன் அளித்த இந்த அற்புத வாழ்க்கையை அற்ப ( எத்தகைய காரணமாக இருந்தாலும் சரி ) காரணங்களுக்காக முடித்துக்கொள்வது மூடத்தனம். வாழ்க்கையை முழுமையாக வாழவே இறைவன் நம்மை அனுப்பியுள்ளார். அதனை தொடக்கத்திலேயே முடித்துக்கொள்ள அல்ல.

பிரச்சனை இல்லாத மனிதனே இல்லை என்பது நாம் அறியாததா? ஆயிரம் பிரச்சனைகள் வரட்டுமே? அத்தனையையும் துணிவுடன் சந்திப்போம். அப்படியும் சில நம் கைமீறி போனால் போகட்டுமே!! அதையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வோம்!!!

வாழ்க்கை மிகவும் எளிமையானது. இங்கே தீர்வுகள் இருக்குமளவுக்கு சிக்கல்கள் கிடையாது. பின் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம்?

மனதைவிட்டு நீங்கா வடுக்கள் ஏராளமாக வாழ்க்கையில் தோன்றும். அதன் வலி அதிகமாகத்தான் இருக்கும். அதன் தாக்கம், பாதிப்பு மறைவது சாத்தியமற்றதே. மறுக்கவில்லை. ஆனால் அதற்காக வாழ்க்கையை தற்கொலை என்னும் செயலால அர்த்தமற்றதாக்கிவிடக் கூடாது.

வாழ்க்கையின் ஒவ்வொரு கணப்பொழுதும் புதுமையானது, சுவாரசியமானது. ரசித்து அனுபவித்து வாழ வேண்டியது. மாறுபட்ட பரிணாமங்களை ஒவ்வொரு நிமிடத்துளியும் அறிமுகம் செய்யும் இந்த வாழ்க்கை மிகவும் இனிமையானதொன்று. இங்கு துன்பமும் இனிமையே.

 

free hit counters
பதிப்புரிமை © TAMILCAFE. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை / IP கொள்கை 
Disclaimer: This site does not store any files on its server. We only index and link to content provided by other sites.