|
|
கருணாநிதியின் அடாவடித்தனம்
தேவையில்லாத
வேலைகளில் ஈடுபடுவதில் கருணாநிதி தற்போதெல்லாம் அதிகம் ஆர்வம் காட்டி
வருகிறார். ஆண்டாண்டு காலம் பின்பற்றி வரப்பட்ட தமிழ் புத்தாண்டு நாளான
சித்திரை ஒன்றை, தை ஒன்றுக்கு மாற்றி சட்டம் இயற்றியுள்ளார். எதற்கு இந்த
வேண்டாத வேலை? இது என்ன பெருவாரியான மக்களின் கோரிக்கையா? எதை எதிர்பார்த்து
இந்த மாற்றம்? எதற்கு இந்த வீண் பகட்டு?
தமிழக மக்களின் மனதில் ஆழப்பதிந்திருக்கும் சித்திரை முதல் தேதியை, தமிழ்
புத்தாண்டு தினத்தை மாற்றி வைத்தது முழுக்க முழுக்க வறட்டு ஜம்பமும்,
விளம்பரமுமேயாகும். இதன் தொடர்ச்சியாக தற்போது, சென்னை மெரினா கடற்கரையில்
இருக்கும் விவேகானந்தர் இல்லத்தை வேறு இடத்திற்கு மாற்றி அங்கு செம்மொழி
கட்டிடம் ஒன்றை அமைக்கப்போகிறாராம். என்ன பையத்தியக்காரத்தனமிது. பிள்ளையார்
கோயிலை இடித்து பெருமாள் கோயிலை கட்டுவதா?
தமிழை செம்மொழியாக்கியதனால் ஏற்பட்ட பயன்களை கருணாநிதியோ அல்லது வேறு
எவராவது பட்டியலிட முடியுமா?
வரலாற்றையும் அதன் முக்கியத்துவத்தையும் அறிந்திடாத கருணாநிதி இம்மாதிரியான
செயல்களில் ஈடுபடுவதற்கு முன், படித்த மேதைகளின் பேச்சைக் கேட்டு நடப்பது
தான் நல்லது. தான் படிக்காவிட்டாலும், படித்தவர்களின் வழிகாட்டுதலை
பின்பற்றுவதுதான் கல்வியறிவற்றவர்களை ஆபத்திலிருந்து காக்கும்.
சுவாமி விவேகானந்தர், உலக அரங்கில் இந்தியாவிற்கு முதன்முதலாக ஒரு எழுச்சித்
தோற்றத்தை உருவாக்கி கொடுத்தவர். இந்தியாவின் தொன்மையான இந்து
மதத்தைப்பற்றியும் அதன் சிறப்புகளைப்பற்றியும் உலகறியச் செய்தவர். சிகாகோ
மாநாட்டில், சுவாமி விவேகானந்தரின் தொடக்க உரையான ”சகோதரர்களே!, சகோதரிகளே!!”
காலத்தால் என்றும் அழியாதவை.
மனித குலத்தின் தோற்றத்தை இந்து மதம் எவ்வளவு ஆழமாக புரிந்துள்ளது என்பதை
அம்மாநாட்டிலே எடுத்துரைத்தவுடன் அங்கு குழுமியிருந்த அனைத்து நாட்டினரும்
இந்தியாவின் பெருமையை எண்ணி வாயடைத்துப் போயினர். அவ்வளவு உயரத்திற்கு
இந்தியாவை உலக அரங்கில் முன்னிலைப்படுத்திய சுவாமி விவேகானந்தரை இன்றோ, வேறு
மூலைக்கு அப்புறப்படுத்த தமிழக அரசு உத்தரவிடுகிறது.
இளைஞர்களின் விடிவெள்ளியான சுவாமி விவேகானந்தரை, “விழிமின்! எழுமின்!!
கருதிய கருமம் கைகூடும் வரை உழுமின்!!!” என்னும் அற்புதவரிகளை எல்லா
இளைஞர்களின் இரத்தத்திலும் கலக்கச் செய்த அந்த உயர்ந்த மனிதரை வேறு
இடத்திற்கு மாற்றுவதன் பின்ணணியில் இருக்கும் மர்ம முடிச்சுகள் சிலவற்றை
அரசியல் நோக்கர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்.
-
இந்து மதத்திற்கு எதிராக செயல்படும் தன் செயல்பாட்டில் சிறிது தொய்வு
ஏற்பட்டுவிட்டதாக மற்ற மதத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இந்து
முட்டாள்கள் விவேகானந்தர் இல்லம் இடிப்பு பற்றிக் கவலைப்படப்
போவதில்லையாதலால், கிறித்துவ, முஸ்லிம் மக்களின் ஆதரவில் எந்தவித பாதிப்பும்
இருக்கப்போவதில்லை என்பதோடு பரபரப்பாக பேசப்பட்டு ஒரு அற்ப விளம்பரம் தனக்கு
கிடைக்குமெனக் கருதுகிறார்.
-
எந்தவித அடிப்படையும், அரசியல் அனுபவமும் இல்லாத கத்துக்குட்டி கனிமொழியை
மாநிலங்களவை உறுப்பினராக அமர வைத்தபின் எந்தவொரு பதவியும் அளிக்கப்படவில்லை.
இதனால், தமிழ்மொழி செம்மொழி என்னும் வறட்டு வாதங்களை முன்வைத்து,
கனிமொழிக்கு அங்கு முக்கிய அரசப்பதவியொன்றை வாங்கித்தந்து, பின்னாட்களில்
விவேகானந்தர் இல்லத்தை அறிவாலயத்தின் இரண்டாவது கட்டிடமாக பயன்படுத்திக்
கொள்ள வேண்டும் என்கிற தந்திரச் செயலும் இந்தப் பின்ணணியில் இருப்பதாக
கூறப்படுகிறது.
-
தமிழக மக்களின் மனதை வேறு பாதைக்கு திசைதிருப்பும் நரித்தனமும் இதில்
மறைந்திருப்பதாகவும் பேசப்படுகிறது. அதாவது, ஒகேனக்கல் விஷயத்தில் திடிரென
பின்வாங்கி மிகப்பெரிய வரலாற்றுப்பிழையை, இமாலயத் தவறை, மன்னிக்க முடியாத
குற்றத்தை, துரோகத்தை புரிந்துவிட்ட இந்தக் கருணாநிதியை மக்கள் மன்னிக்கத்
தயாரில்லை என்பதை அறிந்துகொண்ட இவர், மக்களின் மனதை திசைதிருப்ப
எடுத்துக்கொள்ளப்பட்ட வழிதான் இது என்றும் தகவல்கள் வருகின்றன.
இந்துக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
|
|