|
|
கிரிமி
லேயரை ஏன் நீக்க வேண்டும்?
கிரிமி
லேயரை நீக்க வேண்டும் என்பதில் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் அரசியல்
கட்சிகள் அதில் எத்ததைய நியாயத்தினை முன் வைக்கின்றன? வசதி படைத்திருந்தாலும்,
பணத்தில் கொழுத்திருந்தாலும் சாதி அடிப்படையில் அவர்
பிற்படுத்தப்பட்டவரெனில் அவருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமாம்.
ஆனால் வயிற்றுப்பிழைப்புக்கே போராடிக்கொண்டிருந்தாலும் பிறப்பின்
அடிப்படையில் உருவாக்கப்பட்ட சாதியால் உயர்சாதி எனில்
அவர்களுக்கு எந்த
சலுகையும் இடஒதுக்கீட்டும் அளிக்கப்படக் கூடாது. அவர் பிறந்தது முதல் சாகும்
வரை வறுமையிலேயே உழன்று சாக
வேண்டும்.
இதுதான் இந்தியாவின் ஜனநாயகம். மக்களாட்சி முறை. ஒரு சாராரை திருப்திபடுத்த,
ஓட்டு வங்கியை தக்க வைத்துக்கொள்ள எடுக்கப்படும் இத்தகைய ஒரு தலைப்பட்சமான
முடிவுகளைத் தான் ஆண்டாண்டு காலம் ஜனநாயகம் என்று இந்தியா உலகை
ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.
சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்று இன்னமும்
இருக்கிறார்களா என்ன? அரசியல் கட்சிகள் தான் மீண்டும் மீண்டும் நினைவூட்டி
வருகின்றனவே தவிர மக்களிடத்தில் அந்த எண்ணம் அவ்வளவு ஆழமாக பதிந்துள்ளதாக
நான் எண்ணவில்லை. நான்கு வித வர்க்க பேதங்களும், ஒரு வர்க்கத்தினர் மற்றொரு
வர்க்கத்தினருக்கு சேவை செய்யவே பிறந்துள்ளனர் எனபதெல்லாம் என்றோ
மடிந்துவிட்ட நிலையில், அது இன்னமும் இருப்பதாக ஒரு மாயையை உருவாக்கி
அரசியல் நடத்தி வருகின்றனர் இந்த ஓநாய்க் கூட்டங்கள். இதனால் சாதியில்லை என்ற
எண்ணம் மறைவதற்கு வாய்ப்பேயில்லாமல் போய்விடுகிறது. சாதி வெறியை
நேரடியாகவும், மறைமுகமாகவும் எப்பொழுதும் தூண்டிக் கொண்டே இருக்கச்
செய்கின்றது. பின் எப்படி சாதியில்லா சமுதாயம் அமையும்?
திறமையின் அடிப்படையில் இல்லாமல் வெறும் சாதியின் அடிப்படையில் சலுகைகளை
பெறுவதும், படிப்பதும் வேலை வாங்குவதும் வேசித் தொழிலை விட மிகக் கேவலமானது.
அது மட்டுமில்லாமல் இப்படிப்பட்ட திறமையற்ற ஊழியர்களால் நிறுவனங்களும் அந்த
நிர்வாகமும் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது. அதனால் தான் அரசு
நிறுவனங்களின் வளர்ச்சி நத்தை வேகத்தைக் காட்டிலும் மெதுவாகவே உள்ளது.
ஏனெனில் அங்கே திறமை தேவையில்லை. சாதி தான் தேவை. புத்திசாலித்தனம்
தேவையில்லை. இடஒதுக்கீடு தான் தேவை.
 மதவெறியையும்,
சாதி வெறியையும் நிரந்தரமாக தூண்டிக் கொண்டிருக்கும் இத்தகைய அரசயல்
கட்சிகளுக்கு முன்னோடி பெருத்த சுயநலவாதியும், குறுகிய மனமும் கொண்டிருந்த
அம்பேத்கார் தான். இந்தியாவுக்கென ஒரு சட்டத்தை உருவாக்காமல் இங்கிலாந்து
சட்டத்தை அப்படியே பிரதி எடுத்த இவரை சட்ட மேதை என்பது நகைச்சுவையிலும்
நகைச்சுவை. (வேண்டுமானால் சிறந்த பிரதி மேதை என்று வேண்டுமானால் அழைக்கலாம்)
தன் சுய விருப்புகளுக்கு ஏற்ப அச்சட்டத்தில் சில மாற்றங்களை செய்துவிட்டு
தன் சாதிக்காரர்களின் முன்னேற்றத்திற்கு மட்டும் வழிவகைகளை செய்து
கொண்டுவிட்ட இவரை காலம் என்றுமே மன்னிக்காது.
ஒரு மனிதனின் வாழ்க்கை நிலையை தீர்மானிப்பது பொருளாதாரநிலை தான் என்பது
கண்கூடு. அப்படியிருக்கையில் சாதி எங்கே வந்தது? அது எப்படி ஒருவருடைய
வாழ்க்கையை, வாழ்க்கை நிலையை தீர்மானிக்க முடியும்? பொருளாதாரம் தானே இங்கே
அளவுகோல். அதுதான் சகல வசதிகளையும் பெற்றுத்தருகிறதே தவிர, சாதியா
பெற்றுத்தருகிறது?.
உயர்சாதியிலே
பிறந்திருந்தாலும் பணமில்லாவிட்டால் அவர்கள் பிள்ளைகள் எப்படிப் படிப்பது?
சாதியா அவர்களை படிக்க வைக்க முடியும்? வாழ்க்கை நடத்துவதே பெரும்
போராட்டமாக இருக்கும் நிலையில் அவர்கள் தற்போதெல்லாம் படிப்பதை சுத்தமாக
மறந்துவிட்டனர். பிச்சையெடுத்து வாழ்ந்துகொண்டிருக்கின்ற அவர்கள்
உயர்சாதியில் பிறந்தவர்கள் தானே தவிர, பணத்தில் கொழுத்தவர்கள் அல்லவே. ஆனால்
தாழ்ந்த சாதியில் பிறந்த, பணத்தில் கொழுத்தவர்கள் தங்கள் பிள்ளைகளை உலகின்
சிறந்த கல்விக்கூடங்களில் படிக்க வைக்கின்றனர். இவர்களுக்கு இடஒதுக்கீட்டுச்
சலுகை வழங்கப்பட வேண்டுமாம். ஏன் வழங்கப்பட வேண்டும்? சமுதாயத்தில்
பிற்படுத்தப்பட்டவர்களாம். அதனால் வழங்கப்பட வேண்டுமாம். அப்படியெனில்
உயர்சாதியில் பிறந்த ஏழைக் குழந்தைகளின் உரிமையை இவர்கள் தட்டிப்பறிப்பது
எந்த விதத்தில் நியாயம்? பணமும் இருக்கிறது, இடஒதுக்கீட்டுச் சலுகையும்
இருக்கிறது. இவர்கள் படித்து முன்னேறி வருகின்றனர். ஆனால் உயர்சாதி
ஏழைமக்களின் குழந்தைகள் தெருவோரங்களில் பிறந்து அங்கேயே வாழ்ந்து பின்
அங்கேயே மடிந்தும் விடுகின்றனர். மிகவும் சிறுபான்மையினரான இவர்களுக்காக
குரல் கொடுக்க எவருமிலர். இவர்கள் ஒன்றும் பெரிய ஓட்டுவங்கியாக இல்லாததினால்
அரசியல் கட்சிகளின் கடைநிலைப் பார்வை கூட
இவர்கள் மீது படுவதுமில்லை. இவர்களின் அடிப்படை
உரிமைகள் பறிக்கப்படுவதைக் குறித்து உச்சநீதிமன்றம் என்றுமே கவலை
கொள்வதில்லை. உச்சநீதிமன்றம் ஒருவாக்கப்பட்டதின் நோக்கத்தையே தற்போது அது
கேள்விக்குரியதாக்கியுள்ளது.
|
|