ஜாவாவில் எளிமையாக மின்னஞ்சல் அனுப்ப…

இணைய மொழியான ஜாவா மூலம் மின்னஞ்சல் மிக எளிமையாக பெறவும், அனுப்பவும் முடியும். இதற்கு நம் கணினியில் கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள மென்பொருள்கள் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

1. JDK 1.5
2. Eclipse Europa

இது தவிர பின்வரும் jar files பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
1. mail.jar
2. commons-mail.jar

தற்போது Eclispe-ஐ திறந்து கொள்ளவும். புதிதாக ஒரு Project-ஐ திறந்து கொள்ளவும். அதில் மேற்குறிப்பிட்ட jar file-களை class path-ல் பதியம் செய்யவும்.

பின் கீழ்க்குறிப்பிட்டுள்ள வரிகளை தட்டச்சு செய்யவும்.
 
import org.apache.commons.mail.SimpleEmail;
...

SimpleEmail email = new SimpleEmail();
email.setHostName("smtp.gmail.com");
email.setSmtpPort(465);
email.setAuthentication("userName", "password");
email.addTo("kumar@tamilcafe.net", "Kumar P");
email.setFrom("admin@tamilcafe.net", "TAMILCAFE.NET");
email.setSubject("Test message");
email.setMsg("This is a simple test of commons-email");
email.send();

இது சாதாரண மற்றும் வெறும் எழுத்துக்களை (text only)  சார்ந்த மின்னஞ்சல் மட்டுமே அனுப்ப முடியும். படங்கள், கோப்புகளை இணைப்பாக (attachemnt) அனுப்ப வேண்டுமெனில் MultipartEmail-ஐ பயன்படுத்த வேண்டும்.

import org.apache.commons.mail.*;
...

  // Create the attachment
  EmailAttachment attachment = new EmailAttachment();
  attachment.setPath("mypictures/tamilcafe.jpg");
  attachment.setDisposition(EmailAttachment.ATTACHMENT);
  attachment.setDescription("Picture of TAMILCAFE");
  attachment.setName("TAMILCAFE");

// Create the email message
MultiPartEmail multiPartEmail=new MultiPartEmail();
multiPartEmail.setHostName("smtp.gmail.com");
multiPartEmail.setSmtpPort(465);
multiPartEmail.setAuthentication("userName", "password");
multiPartEmail.addTo("kumar@tamilcafe.net", "Kumar P");
multiPartEmail.setFrom("admin@tamilcafe.net", "TAMILCAFE.NET");
multiPartEmail.setSubject("Test attachment");
multiPartEmail.setMsg("This is a simple test of commons-multiPartEmail");

// add the attachment
multiPartEmail.attach(emailAttachment);
multiPartEmail.send();

இதன் மேலுமொரு சிறப்பு என்னவெனில், கோப்புகள் நம்முடைய கணிப்பொறியில் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இணையத்தில் இருக்கும் எந்தவொரு கோப்பையும் இணைப்பாக அனுப்பலாம். இதற்கு அந்த கோப்பின் URL தெரிந்திருக்க வேண்டும். எனவே பதிவிறக்கம் செய்யாமலேயே இணைப்பை அனுப்ப முடிகிறது.
import org.apache.commons.mail.*;
...

  // Create the attachment
  EmailAttachment attachment = new EmailAttachment();
  attachment.setURL(new URL("http://www.tamilcafe.net/docs/sampleDoc.pdf")); //URL of the file to be attached
  attachment.setDisposition(EmailAttachment.ATTACHMENT);
  attachment.setDescription("Picture of TAMILCAFE");
  attachment.setName("TAMILCAFE");

// Create the email message
MultiPartEmail multiPartEmail=new MultiPartEmail();
multiPartEmail.setHostName("smtp.gmail.com");
multiPartEmail.setSmtpPort(465);
multiPartEmail.setAuthentication("userName", "password");
multiPartEmail.addTo("kumar@tamilcafe.net", "Kumar P");
multiPartEmail.setFrom("admin@tamilcafe.net", "TAMILCAFE.NET");
multiPartEmail.setSubject("Test attachment");
multiPartEmail.setMsg("This is a simple test of commons-multiPartEmail");

// add the attachment
multiPartEmail.attach(emailAttachment);
multiPartEmail.send();

குறிப்பு : கணிபொறி தமிழாக்க வார்த்தைகள் தெரிந்திருப்பின் தயவுசெய்து admin@tamilcafe.net என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.