|
 
|
உச்சநீதிமன்றத்தின்
தீர்ப்பு பாரபட்சமானது
நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் மாபெரும் பிரச்சனை இடஒதிக்கீடு. வாக்கு
வங்கிகளை பெறுவதற்காக காங்கிரஸ் அரசு செய்யும் மாபெரும் பாதகச் செயல்.
நாட்டினை பிளவுபடுத்தி அதில் குளிர்காயும் ஓநாய்க்கூட்டம் இந்த
அரசியல்வாதிகள்.

‘தினம் ஒரு சாதி’ என கோடிக்கணக்கில் சாதிகள் உருவாகிக்கொண்டிருக்கும்
இந்தியாவில் இடஒதிக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்
பாரபட்சமானது.நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைபாட்டுக்கும் எதிராக
செயல்படும் தீய சக்திகளுக்கு உச்சநீதிமன்றம் துணைபோனது மிகுந்த
கண்டனத்திற்குரியது. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், உயர் மரபினர்
என்ற வேறுபாடுகள் இருபத்தோராம் நூற்றாண்டிலும் தொடருவது வருத்தத்திற்குரியது.
‘ஜனநாயக நாட்டில் அனைவரும் சமம்’ என்பதனை உச்சநீதிமன்றம் தற்போது
வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம் கேலிக்குரியதாக்கிவிட்டது. நூறாண்டுகளுக்கு
முற்பட்ட சட்டத்தினை, காலசூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்காமல் அதே பழைய
பஞ்சாங்கத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது பிற்போக்குத்தனத்தையே
காட்டுகிறது. இந்த தீர்ப்பின் மூலம், உச்சநீதிமன்றம் தன் நடுநிலைமையை
இழந்துவிட்டது. சாதி ஓட்டுக்களை பெறுவதில் குறியாக இருக்கும் காங்கிரசு
அரசின் மகுடிச் சத்தத்திற்கு உச்சநீதிமன்றம் தலையாட்டத் தொடங்கிவிட்டது.
நாட்டுநலனை புறந்தள்ளிவிட்டு, தம் அரசியல் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு
செயல்படும் அர்ஜின்சிங், சிதம்பரம், கருணாநிதி,அன்புமணி, இராமதாஸ் மற்றும்
பிராணாப் முகர்ஜி போன்றோர் என்றைக்கும் மன்னிக்க முடியாத துரோகிகள்.
உயர்கல்வி நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் 27%
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதிக்கீடு வரும்
கல்வியாண்டு முதல் அமுல்படுத்தப்படும் என்பதை அழுத்தமாக தெரிவித்துள்ளது
காங்கிரஸ் அரசு. இதனை இடதுசாரி கட்சிகளும் முழு அளவில் ஆதரிக்கின்றன.
ஏனென்றால் இவர்களுகெல்லாம் கொள்கை என்றால் கிலோ என்ன விலை... அனைத்து
அரசியல்வாதிகளும் இதனை விதிவிலக்கின்றி ஆதரிப்பது வாக்குகளை பெற்று
இந்தியாவை வாயில் போட்டுக்கொள்ளத்தான்.

தீண்டாமை குற்றம், பாவச்செயல் என்று எல்லாப்புத்தகத்திலும் குறிப்பிடும்
இந்திய அரசு இத்தீண்டாமைக்கு காரணமான சாதியை மட்டும் இன்னும் கெட்டியாக
பிடித்துக் கொண்டிருப்பது ஏன்? ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ எனும்
உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு என்னும் பின்வாசல்முறையை ஆதரிப்பது ஏன்?
நீதித்துறையிலும் இடஒதுக்கீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என்று புலம்பும்
அரைவேக்காடு இராமதாசு போன்றவர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஆதரிக்கிறதா?
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதிக்கீட்டினை கொண்டுவர வேண்டியதின் அவசியம்
என்ன வந்தது இப்போது? "உயர்கல்வி நிறுவனங்களில் கூடுதலான இடங்களை
உருவாக்குவதினால் பொதுப்பிரிவினருக்கு எந்தவித பாதிப்பும் வராது" என்று
கண்துடைப்பு வார்த்தைகளை அள்ளிவீசும் அர்ஜின்சிங் அவர்களே, அப்படியென்ன
வியர்த்து வடிகிறது உங்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதிக்கீட்டில்?
எதனடிப்படையில் ஒருவர் பிற்படுத்தப்பட்டோர்? சாதியின் அடிப்படையில்.
வெட்கமாக இல்லை, இன்னும் சாதியின் பெயரால் அரசியல் செய்து கொண்டிருக்க....?
பொருளாதார அடிப்படையில் இடஒதிக்கீடு அளிக்கப்படலாமேயன்றி, ஒருக்காலும்
சாதியின் பெயரால் வழங்கக் கூடாது. இத்தனை ஆண்டுகாலமாக இடஒதிக்கீடு
அளித்தீர்களே, இதுவரை அதனாலடைந்த பயன் என்ன? அதைப் பயன்படுத்தி
முன்னேறியவர்கள் எத்தனை பேர்? அதற்கான செலவு இதுநாள்வரை எவ்வளவு? சாதி
அரசியலால் வயிற்றை நிரப்பும் ராமதாஸ் போன்றவர்கள் தமிழகத்தின் சாபக்கேடு
போலும். மனிதரை மனிதராக மதிக்காமல், சாதியின் பெயரால் வேறுபாடுகளை
உட்புகுத்தி ஒருவரையொருவர் வெட்டி சாய்த்து, அதில் பீறிட்டு வரும்
இரத்தத்தில் உயிர் வாழும் மனிதர்களை என்னவென்று சொல்வது? ஆக எல்லாமே
சாதியின் அடிப்படையில்தான் இனி வேலைவாய்ப்புகள் வழங்கப்படுமெனில் இந்தியா
வெகுவிரைவில் தற்கொலை செய்து கொள்ளப்போகிறது என்றே தோன்றுகிறது.
நாட்டை பாழுங்கிணற்றில் தள்ளிய மண்டல் கமிழன் தலைவன் வி.பி.சிங் இவருடைய
நெருங்கிய நண்பர்." ஊருக்குத்தான் உபதேசம் தனக்கில்லை" என்பதில் அசையாத
நம்பிக்கை கொண்டவர். சாதிவெறியில் மூழ்கி முத்தெடுத்தவர். தமிழ்நாட்டில்
அமைதி, வளர்ச்சி,சமத்துவம், சகோதரத்துவம் முதலியவற்றை அடியோடு
புதைத்துவிட வேண்டும் என்பதில் ஆணித்தரமாக இருப்பவர், வயதான நடைதளர்ந்த
திமுக தலைவர் கருணாநிதி தான் அப்பெருந்தகை. பிரித்தாலும் கொள்கையில் இவரை
மிஞ்ச இனி ஒரிவர் பிறந்து தான் வரவேண்டும். தமிழ்நாட்டை மண்மேடாக்கி
விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். இவரையோ, இவர் சார்ந்த கட்சிக்காரர்களையோ
ஒரு நாளும் திருத்த முடியாது. திருந்தாத ஜன்மங்கள் இருந்தென்ன லாபம்?
தனியார் நிறுவனங்களுக்கு நிகராக, குறைந்தபட்சம் அதன் அருகிலாவது நிற்கும்
துணிவு எந்த அரசு நிறிவனத்திற்காவது உண்டா? வெகு சிறப்பாக செயல்படும்
தனியார் நிறுவனங்கள், சாதியினை ஒருபோதும் ஆதரிப்பதுமில்லை, தூண்டுவதுமில்லை.
திறமையினை மட்டுமே அங்கு நம்புகிறார்கள். ஆதிரிக்கிறார்கள். வளர்ச்சி என்பது
அங்கு நிரந்திரமாக தங்கிவிடுகிறது. ஆனால் அரசு நிறுவனங்களில் ஆயிரம்
உட்கட்சி பூசல்கள், கும்பல்கள். ஒருவருக்கு ஒருவர் எதிராக
செயல்பட்டுக்கொண்டு சாதிச் சாக்கடையில் புரண்டுகொண்டிருக்கின்றனர். இந்திய
அரசாங்கமும் திவால் நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
பெற்றோர்களே, மாணவர்களே சாதியின் பெயரால் பிளவுபட்டு நிற்காதிர்கள். ஒன்று
சேருங்கள். திறமையை, மதிப்பெண்ணை ஆதரியுங்கள், ஊக்குவியுங்கள். நாடு
வளர்ச்சிப் பாதையில் மிக வேகமாக பயணித்து வருகையில், நாம் மட்டும்
பிளவுபட்டு இருப்பதை இனியும் ஏற்றுகொள்ளலாகாது.
புத்தகமொன்றின் நினைவிலிருந்து...
மனிதர்கள் அனைவரும் எல்லா நிலையிலும் சமமானவர்கள் என்ற கூற்று தவறானது.
ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்த்து மாறுபட்டிருக்கிறார்கள் ஒவ்வொருவருக்கும்
ஒரு தனித்துவமிருக்கிறது. மனிதர்கள் அனைவரும் சமமான அளவில் திறமைசாலிகளாக
இருக்கப்போவதில்லை. ஆகையினால் திறமைசாலிகளையும் அது இல்லாதவர்களையும் நாம்
சமமாக நடத்தக்கூடாது. இந்த மாதிரி விஷயங்களில் விட்டுக்கொடுக்க வேண்டும்
என்ற பேச்சுக்கே இடமில்லை. மற்றவர்களை உயர்த்த வேண்டுமென்பதற்காக
தகுதியில்லாதவர்களுக்கு உயர்ந்த கல்வியும், உயர் பதவியும் கொடுக்க
வேண்டுமென்பதை நான் முற்றிலும் வெறுக்கிறேன். உழைப்பின் துணைகொண்டு
முன்னேறாமல் , வெறும் சலுகைகளின் துணை கொண்டு முன்னேறுவது எனபது
அருவருக்கத்தக்கது. பெரும்பான்மையினரை சந்தோஷப்படுத்துவதற்காக
திறமைசாலிகளை பலியிட்டுவரும் சமூகம் பின் தங்கிய நிலையிலிருந்து ஒருபோதும்
மீளாது. மந்தபுத்திக்காரர்களுக்கும், உலர்ந்து மங்கிப்போன
சுறுசுறுப்பில்லாத சோம்பேறிகளுக்கும், சுயமாக சிந்திக்கத்
தெரியாதவர்களுக்கும், எந்த ஒரு உயர்ந்த இலட்சியத்தையும்
ஏற்படுத்திகொள்ளாதவர்களுக்கும், சாப்பிடுவது வம்பு பேசுவது, தூங்குவது
போன்ற உபயோகமற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கும் எதற்காக சலுகைகள் வழங்கப்பட
வேண்டும்? ஓட்டுக்களைப் பெறுவதற்காக இன்றைய அரசியல் வாதிகள் மற்றவர்களை
சோம்பேறிகளாக மாற்றி வருகிறார்கள்.
|
|