பாராளுமன்ற முறைப்பற்றி ஹிட்லர்

எனது போராட்டம் புத்தகத்தின் நினைவுக் குறிப்பேட்டிலிருந்து....

பார்லிமெண்டென்று நாம் கூறும் இந்த ஸ்தாபனமானது தீர்க்க நியாயத்திற்குச் சிறிதும் ஒவ்வாத விஷயமாகும்.

பிரதிநிதித்துவ சபையான பார்லிமெண்டில் தனி ஹோதாவில் யாருக்கும் பொறப்பிராததே எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணமாகும். உதாரணமாக பார்லிமெண்டு ஒரு சட்டத்தை நிறைவேற்றுகிறதென்றும், அது பின்னர் நாசகரமான விளைவுகளுக்கு காரணமாகிறதென்றும் வைத்துக் கொள்வோம். அதற்கு யார் பொறுப்பாளியென்று கூற முடியாது. எல்லோருக்கும் பொறுப்புள்ள விஷயம் ஒருவருக்கும் பொறுப்பில்லையென்ற கதையாகவே அது முடியும்.

ஏரானமான அங்கத்தினர்களிடையே ஒரு பார்லிமெண்டு நிறைவேற்றிய ஒரு சட்ட நடவடிக்கைக்கு சர்க்கார் தலைவர்கள்தான் பொறுப்பாளியென்று கூறுவது சாத்தியமா? ஒரு சிறந்த ராஜதந்திரியின் வேலையென்ன? அரிய கொள்கைகளையும, ஆக்கத் திட்டங்களையும் மடசாம்பிராணிகளடங்கிய ஒரு கூட்டத்தினருக்கு விளக்கி வீண் காலம் போக்க வேண்டுமா?

மகத்தான அரசியல் முறைகளைச் சிந்தித்த அவைகளை அதுஷ்பானத்திற்குக் கொண்டுவரும் பேச்சுகளால் பிறரைத் தம் வசப்படுத்தி அவர்களுடைய சம்மதத்தைப் பெறும் திறமை இன்றியமையாத ஓர் அம்சமா?

தேர்தல் முறையின் முடிவு தற்செயலான ஓர் விஷயமாகும் தவிர, அம்முறை யோக்கியப் பொறுப்பற்ற விதத்திலும் கையாளப்படுவதுண்டு, அப்படியிருக்க அந்த நீதியில் அமைக்கப்பட்ட ஒரு சபையில் ஒரு சிறந்த ராஜதந்திரி தம் கொள்கைக்குப் பெரும்பாலோருடைய ஆதரவைப் பெறத்தவறிவிட்டால், அவரை திறமையற்றவராகக் கூறிவிடலாமா? இவ்வுலகில் எப்போதுமே மேதாவியின் நடவடிக்கையானது பொது ஜனங்களின் அவிவேதத்தையும், மதத்தையும் கண்டிப்பதாக இருப்பது வழக்கமல்லவா? அப்படியிருக்க தமது கொள்கைக்கு ஆதரவைத் தேடுவதற்காக பார்லிமெண்டு அங்கத்தினர்கள் குழாமை, தளுக்கு வார்த்தைகள் கூறித் திருப்தி செய்ய முடியாவிடில் ஒரு ராஜதந்திர நிபுணர் என்ன செய்வது? அவர் லஞ்சம் கொடுத்து அக்கூட்டத்தின் சம்மதத்தை விலைக்கு வாங்குவதா? பிடிவாதமும், மடத்தனமுமுள்ள ஒரு கூட்டத்தை திருப்தி செய்ய முடியவில்லை என்பதற்காக அவர், தேசத்தின் வாழ்விற்கே உயிர் நாடி போல் தோன்றும் முறைகளை அமுலுக்கு கொண்டு வராமல் விட்டு விடுவதா? அத்தகைய நிலையில் அவர் பதவியிலிருப்பதா அல்லது விலகி விடுவதா? ஆழ்ந்த அரசியலில் அறிவு படைத்த அவர் தம்முடைய ஒழுக்கத்திற்கும், யோக்கிய பொறுப்புணர்ச்சிக்கும் முரணின்றி அப்பிரச்சினையை எவ்விதம் தீர்ப்பது? உண்மையான தலைவர் தம்மை வயிற்றுப் பிழைப்பு அரசியல்வாதிகளுக்குச் சமமாக இழிவுப் படுத்திக்கொள்ள முடியுமா? அவ்வித நடவடிக்கை பற்றியும், இறுதியான பொறுப்பு தம் தலையில் அமராதென்பதைப்பற்றியும் வயிற்றுப்பிழைப்பு அரசியல்வாதி, விபரீதமான அரசியல் திருவிளையாடல்களில் ஈடுபடாமலிருப்பாரா? எனவே பெரும்பான்மையோரின் முடிவை ஆதாரமாகக் கொண்ட நம பார்லிமெண்டு சர்க்கார் முறை உண்மையான தலைவர்கள் வருவதற்கே வழியின்றிச் செய்வதாக இல்லையா?
 

மானிடவர்க்கத்தின் முன்னேற்ற முறைகள் தனி நபரின் முறையிலிருந்து உதயமாகின்றனவா? (அல்லது) பெரும்பான்மையோரின் முறையிலிருந்து உதயமாகின்றனவா? மேதாவிகளின்றி மானிடவர்கத்தின் நாகரீகம் எதர் காலத்தில் திருப்திகரமாகத் திகழ முடியுமா?

பெரும்பான்மையோரின் தீர்ப்பை ஆதாரமாகக் கொண்ட பார்லிமெண்டு முறையானது தனி நபரின் அதிகாரத்தை, அதாவது அவரது புத்திசாதுர்யத்தினால் ஏற்படக்கூடிய பலனை நிராகரிக்கின்றது. அறிவாளிகளின் அதிகாரமுறை என்ற மூலாதாரமான இயற்கை நியதிக்கு பார்லிமெண்டு ஆட்சி முரணாகும்.

.... பெரும்பான்மையோரை எப்படியாவது திருப்தி செய்யும் பேர்வழிகள் தான் பார்லிமெண்டு முறையில் வெற்றியடைய முடியும்.

பொறுப்பேற்க பயந்து பதுங்குவோருக்குத்தான் பார்லிமெண்டு தகுதியான இடமாக இருந்து வருகிறதேயன்றி, அஞ்சா நெஞ்சமும், ஆண்மையும் பொறுப்பேற்று மார் தட்டும் தைரியமும் உள்ளவர்களுக்கு அங்கு இடமில்லை. ஒரே வார்த்தையில் கூறுமிடத்து அது நாளடைவில் வயிற்றுப் பிழைப்பு அரசியல்வாதிகளும் அறியாமையும் கோழைத்தனமுள்ள குதர்க்க வாதிகளும் நிறைந்த ஒரு குழாமாகிவிடுகின்றது. மேலே குறிப்பிட்ட குணங்கள் நிறைந்த பதவி மோககக்காரர்களின் எண்ணிக்கைக்கு எல்லையேயில்லை. பொறுப்பின் பளு எவ்வளவுக்கெவ்வளவு குறைகின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு அத்தகையோரின் தொகையும் அதிகமாகி வரும். அச்சபைக்குள் செல்ல தங்களுக்கு சாதக பட்சி போல் காத்துக் கொண்டிருப்பவர்களடங்கிய ஜல்தாவுக்கு முடிவே கிடையாது! அவர்களில் யாராவது ஒருவர் நீண்டகாலம் பதவியிலிருந்துவிட்டால், ஏதோ தங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் புனிதமான ஒப்பந்தம் மீறப்பட்டு விட்டது போல் மற்றவர்கள் ஆத்திரமடைந்து அப்பேர்வழியை விரட்டும் வரையில் பேசாமலிருக்க மாட்டர்கள். பதவியிலிருந்து விலகுவோர், காத்துக் கொண்டிருப்போரின் ஜால்தாவில் மீண்டும் வந்து சேர்ந்து, தங்களுடைய சந்தர்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பர்.

நீண்ட காலம் பதவியிலிருந்த உனக்கு இன்னும் இங்கு என்ன வேலை என்று இதரர்கள் அவரை விரட்டியடித்து விடவும், தப்பித்தவறி ஒரு சிறந்த மேதாவி அச்சபைக்கு வந்து விட்டலோ, அவரை வீழ்த்தும் விஷயத்தில் மற்றெல்லோரும் ஒன்று சேர்த்து விடுவார்கள். கோழைகளும் அறிவிலிகளுமான அக்கோஷ்டியினருக்கு இந்த ஒரு விஷயத்தில் மாத்திரம் புத்தி மிகவும் தீட்சண்யமாக வேலை செய்யும்.

ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஐந்நூறு அங்கத்தினர்களும் வாழ்க்கையின் பல்வேறு துறைகளிலிருந்தும் வந்தவர்கள், அவர்களின் ஒவ்வொருவருடைய அரசியல் திறமையும் ஒவ்வொரு ரகமாக இருக்கும். எனவே அவர்களையெல்லாம் சேர்த்து இணைப்பது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிசு போடுவதாகும்.  பொதுஜன வாக்குரிமையின மூலம் ராஜதந்திரிகளைச் சிருஷ்டித்துவிட முடியாது சர்வஜன வாக்குரிமையிலிருந்து மேதாவிகள் ஜனிக்கின்றனர். என்பதைக் காட்டிலும் மடத்தனமான எண்ணம் வேறெதுவுமில்லை.

சர்வ சாதாரண அறிவு படைத்த 500 பேர் மிக மிக முக்கியப் பிரச்சணைகளையொட்டி முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. அவர்களில் பத்தில் ஒரு மடங்கு பேர்கள் பொருளாதாரப் பிரச்சினைகளையொட்டிய அரிச்சுவடி கூட அறிந்தவர்களாக இருக்க மாட்டார்கள். அந்நிலையில் தேசத்தின் விதியையே நிர்ணயிக்கக்கூடிய பொருளாதார விஷயங்களையொட்டி அத்தகையோர் என்ன தீர்மானம் செய்ய முடியும்.?

ஒரு சபையென்றிருந்தால் அதிலுள்ள சகலரும் குறிப்பிட்ட பிரச்சனைகளில் நிபுணர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை, ஒரு சில நிபுணர்களடங்கிய கமிட்டிகளிருந்தால் போதும் அவைகள் கூறும் ஆலோசனைகளை ஆதாரமாகக் கொண்டு சபை முடிவு செய்யலாமென சிலர் வாதிக்கலாம். அவ்விதமாயின், ஒரு சில நிபுணர்கள் முடிவு செய்ய வேண்டிய பிரச்சினைகளையொட்டி அநாவசியமாக 500 பேர்கள் ஏன் விவாதித்துக் காலத்தை கழிக்க வேண்டும்? எனவே அது காரியவாதமேயின்றி, உண்மையை ஆதாரமாகக் கொண்டதல்ல, அறிவாளிகளும், விஷயஞானமுள்ளவர்களுமடங்கிய ஒரு சபையைக் கூட்ட வேண்டுமென்பது நவீன ஜனநாயக பார்லிமெண்டு முறையின் நோக்கமல்ல. உண்மை என்னவெனில் 500 அங்கத்தினர்களின் மூலம் தங்களிஷ்டப்படி காரியங்களை நடத்த முடிகின்றது. அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு அறிவாளிகளாலும, சமய சஞ்சீவிகளாகவுமிருக்கின்றார்களோ, அவ்வளவுக்கவ்வளவு திரை மறையில் வேலை செய்யும் சைத்தான்களுக்குக் கொண்டாட்டமாகின்றது. அந்நிலையில் தான் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்கத் தயாராகியிருக்கும் எவர்தான் அச்சபையில் சேர நாட்டங் கொள்வார்?

" ஹிட்லரின் வார்த்தைகள் தற்போதைய சூழ்நிலையில் 100 % உண்மையாகத்தான் தெரிகின்றது. அதுவும் கூட்டணி ஆட்சி என்கின்ற மண் குதிரை நாட்டை ஒருநாளும் பெரிய அளவில் சாதித்து விட அனுமதியாது."